மாத இறுதிக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றம்?

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை மாற்றங்கள் இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை மாற்றங்கள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை மாற்றங்களை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களின் காரணமாக சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.