கேள்விப்பத்திர கோரலின்றி அபிவிருத்தி திட்டமொன்றை பெற்றது இந்தியா

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் வீதி அபிவிருத்தி திட்டமொன்றை கேள்விப்பத்திரம் கோரலின்றி இந்திய நிறுவனம் ஒன்று பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி - கட்டுகஸ்தோட்டை முதல் கலகெதர வரையிலான வீதியின் வீதி புனரமைப்பு திட்டமே இந்திய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து கலகெதர வரை 4 ஒழுங்கைகளை கொண்ட வீதியை புனரமைத்தல் மற்றும் கட்டுகஸ்தோட்டை நகரத்துக்கு 4 ஒழுங்கைகளை கொண்ட ஒரு புதிய உப வீதியை நிர்மாணித்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தத் திட்டத்துக்கான முதற்கட்ட பணிகளுககான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.