இனவாதிகளால் சீர்குலையும் இலங்கை! மைத்திரி கவலை

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார்.

சில இனவாத குழுக்கள் நாட்டில் வன்முறையை ஏற்படுத்தி நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும் அண்மைய நாட்களில் இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் சர்வதேச சூரிய சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.