போர் முடிந்து 9 ஆண்டுகள் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதனையும் வழங்கவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

போர் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை என புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற போதும் அதற்கு பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பான இரகசிய அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சகல சம்பவங்கள் தொடர்பிலும் தான் தலையிட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த போதிலும் இதுவரை அதனை செய்யவில்லை.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தலையிட்டு அதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் குறிப்பிடடுள்ளனர்.

இதனிடையே போரில் பயங்கரவாத செயல்களில் சகல இனங்களின் உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக உலக இலங்கையர் பேரவையில் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அதன் இணை தலைவர் ரொஷான் வீரபுரகே தெரிவித்துள்ளார்.

போரின் பின்னர் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் குடியேற்றுதல், கண்ணி வெடிகளை அகற்றுதல் உட்பட பல விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

இதனால், இலங்கையை இலக்கு வைத்து தடைகளையோ நிபந்தனைகளையோ விதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.