சந்தேகநபர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

கண்டி வன்முறை தொடர்பில் கைது செய்யப்படட சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவாக சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரைவிடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிடிய பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்குத் தேவையானநடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

கண்;டி வன்முறை தொடர்பில் அவசரகால நிலைமை ஒழுங்கு விதிகளில் பிரதான சந்தேகநபர்கள்உட்பட மொத்தமாக 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.