ஜெனிவா சென்றார் கஜேந்திரகுமார்!

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வெள்ளிக்கிழமை ஜெனிவா சென்றுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கையெழுத்துப் போராட்டம் ஊடாக வடக்கு, கிழக்கில் சுமார் இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விரையில் ஜெனிவா செல்ல உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தமது மகஜரை மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க உள்ளனர்.