எரிக் சொல்ஹெய்மை சந்தித்தார் மைத்திரி

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்துள்ளார்.

தற்போது எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருக்கிறார்.

இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி, டெல்லியில் வைத்து அவரை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இலங்கையில் தற்போது 28 சதவீதமாக இருக்கின்ற வன அடர்த்தியை, 32 சதவீதமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் சுற்றாடல் பாதுகாப்புக்கான ஐக்கிய நாடுகளின் உதவிகளையும் அவர் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைத்தவிர, நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.