இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ராஸ்திரபதி பவனில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சூரிய சக்தி மாநாட்டுக்கு இலங்கை ஜனாதிபதியின் பங்குபற்றுதலை பெரும் கௌரவமாக கருதுவதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், சர்வதேச சூரிய சக்தி மாநாட்டின் செய்தியை முழு உலகிற்கும் எடுத்துச் செல்வதற்கு இணைந்து செயற்பட உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்றிருப்பதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, எதிர்காலத்திலும் இந்த உறவை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இரு நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.