மகிந்தவின் இல்லத்தில் ஒன்றுகூடும் பொது எதிரணித் தலைவர்கள்

Report Print Rakesh in அரசியல்

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மகிந்த அணியான பொது எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்கள் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று மாலை கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பொது எதிரணி தீர்மானித்திருந்தாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அந்த நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது பிரேரணையைக் கையளித்துவிட வேண்டும் என்பதில் பொது எதிரணி குறியாக உள்ளது. இது பற்றியே இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.