மூன்று இடங்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்: சுமந்திரன் தகவல்

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிட்கு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி சபைகள் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து செயற்படவுள்ளன. அதற்கு முன்னதாக உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக நாளை யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பில் இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.