தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவதாக தெரிவிக்கும் பிரதியமைச்சர்

Report Print Navoj in அரசியல்

மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்து தொழில் ரீதியாக செய்யக் கூடிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்து அதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

குடும்பிமலை பிரதேசத்தில் போதுமான காணி வளம், நீர் வளம் இருக்கின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி உற்பத்திகளை தரமான முறையில் செய்து அதனை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை எங்களால் பெற்றுத் தர முடியும்.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயற்படுவீர்கள் என்று சொன்னால் நாங்கள் உங்களுக்கு இவ்வாறான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.