முஸ்லிம் தலைவர்கள் தோற்றுவிட்டனர்: பொதுபலசேனா சூளுரை

Report Print Gokulan Gokulan in அரசியல்

முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று, பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பாதுகாத்துக்கொள்ளத் தவறி இருக்கின்றனர். தங்களது கட்சிக்குள் ஜனநாயகத்தை பேணுவதற்கும் அவர்களால் முடியாது போய் இருக்கிறது.

இவ்வாறான நிலையில் அவர்கள் நாட்டில் இணக்கப்பாட்டை எவ்வாறு ஏற்படுத்துவார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.