கண்டி வன்முறை சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

Report Print Murali Murali in அரசியல்

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பிலும் இத்தகைய வன்முறை சம்பவங்களை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடலங்கவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கொழும்பிலும் வன்முறை சம்பவங்களை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, ஸ்திரமான பொறுப்புகூறலின் பிரகாரமே சமூக வலைத்தளங்களை திறக்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.