பல தசாப்தங்களின் பின்னர் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள்

Report Print Gokulan Gokulan in அரசியல்

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர, காலச்சாரம் வர்த்தகம் மற்றும் முதலீடு இணைப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

இன்றைய ஜப்பான் வருகையானது இரண்டு நாடுகளுக்கு இடையில் காணப்படும் உறவை வெளிப்படுத்துவதாகும்.

1952ஆம் ஆண்டுகளிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு காணப்பட்டுள்ளது.

சரியாக அதற்கு 66 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது நமது உறவு தொடர ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.