மாகாண தொகுதி எல்லை மீள்நிர்ணய அறிக்கை விவாதிக்கப்படும் திகதி அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

மாகாண தொகுதி எல்லை மீள்நிர்ணய அறிக்கை இந்த மாதம் 22ம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

முன்னாள் நில அளவையீட்டு ஆணையாளர் நாயகம் கணகரத்தினர் தவலிங்கம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இது கடந்த மாதம் 19ம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அதனை கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி அவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதன்படி அதனை எதிர்வரும் 22ம் திகதி முழுநாளும் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நிறைவேற்றுவதற்கு 3இல் 2 பெரும்பான்மை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் புதிய அறிக்கையின் படி வடக்கு கிழக்கிற்கு வெளியில் வசிக்கின்ற சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.