ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்தவாரம்: மகிந்த அணி தீர்மானம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்க மகிந்த அணி தீர்மானித்துள்ளது.

மகிந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தபிரேரணை கடந்த வாரமே சபாநாயகரிடம் கையளிக்கப்படவிருந்த போதும், நாட்டின் சூழ்நிலையை கருதி அது பிற்போடப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அடுத்தவாரம் இந்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படுவதுடன், இதற்கு ஆதரவாக கையெழுத்து பெறும் நடவடிக்கைகளும் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலரும் கைச்சாத்திடுவார்கள் என்று மகிந்த அணி எதிர்பார்க்கிறது.