சமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்!

Report Print Ajith Ajith in அரசியல்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை காரணமாக அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உள்ள இலங்கையர்களை சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை காரணமாக அரச நிறுவனங்களின் வருமானம் உயர்வடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா டெலிக்கொம் மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு என்பனவற்றுக்கு நாளொன்றுக்கு 200 மில்லியனுக்கு அதிகமான வருமான அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.