ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் ஏற்படபோகும் மாற்றம்

Report Print Murali Murali in அரசியல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான அடுல் கெசாப்பை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மாற்றம் செய்வதற்கு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உள்விவகாரங்களில் அமெரிக்க தூதுவரான அடுல் கெசாப் தலையீடு செய்துவந்தார்.

அடுல் கெசாப் தலைமையிலான குழு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவாளர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.”

இந்நிலையில், அமெரிக்க தூதுவரான அடுல் கெசாப்பை மாற்றியமைப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டிரம்பின் நெருங்கிய ஒருவர் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அடுல் கெசாப் நாட்டை விட்டு செல்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.