ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மகிந்த வீட்டில் கலந்துரையாடல்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக கலந்துரையாட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஒன்று கூடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.

அதேவேளை இந்த மாதம் பதவிக்காலம் முடியவுள்ள கிழக்கு மாகாணம், பதவிக்காலம் முடிந்த வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தலை நடத்தும் தினத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.