இம்மாத இறுதிக்குள் மற்றுமொரு தேர்தல்?

Report Print Gokulan Gokulan in அரசியல்

வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தலை இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாகாணங்கள் தற்போது ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

அங்கு பொதுமக்களுக்கான சேவைகள் எவையும் நடைபெறுவதில்லை.

இந்தநிலையில் இந்த மாத இறுதிக்குள் அங்கு தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.