அயோம் ஷர்மிளாவிற்கு கடவுச்சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் பணிப்பு

Report Print Gokulan Gokulan in அரசியல்

இந்தியாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அயோம் சானு ஷர்மிளா, ஜெனீவாவில்நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்துகருத்து வெளியிட அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவருக்கான கடவுச் சீட்டை வழங்க பல மாதங்களாக இந்திய கடவுச்சீட்டு மையம்தாமதித்து வருகிறது.

இதற்கு எதிராக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் மனுத்தாக்கல்செய்திருந்த நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுரை அமர்வு நேற்று கடவுச்சீட்டுமையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது அவர் தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் தமது கணவருடன் வசித்து வருகின்றநிலையில், அந்த பகுதி காவற்துறையினர் அவர் குறித்த விபரங்களை வழங்க தாமதித்துள்ளது.

இதனாலேயே அவருக்கான கடவுச்சீட்டை வழங்க தாமதிப்பதாக கடவுச் சீட்டு மையம்தெரிவித்துள்ளது.