ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!- 95 பேர் ஆதரவு?

Report Print Gokulan Gokulan in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 95நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தரப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கண்டி சம்பவங்களால் பிற்போடப்பட்டிருந்த இந்த பிரேரணையை விரைவுப்படுத்த மகிந்த அணிதீர்மானித்துள்ளது.

இந்தப் பிரேணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 30க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஆதரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இராஜாங்க அமைச்சர்களான பாலித்த ரங்கே பண்டார மற்றும் லவசன்ன சேனாநாயக்கஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர் மயன்ன திஸாநாயக்கவும் இதற்கு ஆதரவைவெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் குறித்தநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கவிருப்பதாக உறுதியளித்துள்ளனர்.