பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 20ம் திகதி?

Report Print Ajith Ajith in அரசியல்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த செவ்வாய்க்கிழமை(20) முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கண்டி வன்முறைகள் காரணமாக குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த ஆதரவுதரப்பினர் பிற்போட்டிருந்தனர்.

எனினும் அதனை விரைவாக சபாநாயகரிடம் கையளிப்பதற்கு நேற்றையதினம் மகிந்தவின்தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றசபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரேரணைக்கு இதுவரையில் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாககூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.