கண்டியில் உயிரிழந்த சிங்கள வாலிபர் குடும்பத்திற்கு நிதியுதவி

Report Print Aasim in அரசியல்

கண்டியில் உயிரிழந்த சிங்கள இளைஞனின் குடும்பத்தினருக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்துள்ளார்.

கண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் முஸ்லிம் சிங்கள பிரச்சினை எழ காரணம் எனக் கருதப்படும் கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த சிங்கள சகோதரரின் குடும்பத்தினரை, இன்று பிற்பகலில் சந்தித்த அமைச்சர் பைசர் முஸ்தபா தனது குடும்பத்தினர் சகிதம் கலந்துரையாடி ஆறுதல் தெரிவித்திருந்தார்.

மேலும் தன் சொந்த நிதியில் இருந்து ஒரு தொகை பணத்தினை அவர்களுக்கு வழங்கி உதவினார்.

இதன் போது அப்பிரதேச (அம்பாளை) பெளத்த விகாரையின் விகாராதிபதி மற்றும் முஸ்லிம் பள்ளி வாசலின் இமாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னதாக நேற்றைய தினம் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உயிரிழந்த சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.