கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டு வரும் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாகவும், அவரது ஆசிர்வாதத்துடனும் கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாகவும் கோத்தபாய ராஜபக்சவை தனக்கு அடுத்தவராக கொண்டு வர முயற்சிப்பதாகவும் பிரஜைகள் சக்தி அமைப்பு (புரவெசி பலய) குற்றம் சுமத்தியுள்ளது.

சிவில் அமைப்புகள் இதற்கு எந்த வகையிலும் இடமளிக்காது எனவும், மக்கள் எதிர்பார்த்தது போல அழிவை ஏற்படுத்தக் கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்துவதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் நோக்கத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்க மாட்டார்.

ஆரம்பத்தில் முதல் அவரது செயற்பாடுகள் மூலம் இது உறுதியாகியுள்ளது.

கண்டி சம்பவத்தின் பின்னர் கண்டிக்கு விஜயம் செய்த ஜனதிபதி, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையுடன் தொடர்புடைய எல்லே குணவங்ச தேரரை தன்னுடன் அழைத்துச் சென்றதுடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் இனவாத, மதவாத பிக்குகளை தன்னுடன் இணைந்துக்கொண்டார்.

ஜப்பானுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தில் கலகொட அத்தே ஞானசார தேரரை இணைத்து கொண்டமை இதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

அன்று மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்த உறுதுணை வழங்கியமை இணையாக உந்து சக்தியை வழங்கிய வருகிறார். எதற்காக அவர் இதனை செய்கிறார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவை எவற்றையும் எதிர்க்காது அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார்.

இதன் மூலம் ரணில் விக்ரமசிங்க எவருக்கு எதிராக குரல் கொடுக்கவோ, செயற்படவோ கூடிய அரசியல் மதிப்பீடுகளை கொண்ட தலைவர் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.

இதற்கு அமைய மாதுளுவாவே சோபித தேரரின் உன்னத நோக்கத்தை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஊடக நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து நாங்கள் ஆழமாக கலந்துரையாடி வருகின்றோம் என காமினி வியாங்கொட குறிப்பிட்டுள்ளார்.