பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டால் தோற்கடிக்கப்படும்

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாட்டில் உள்ள இனவாதிகள் சிலர் இணைந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான இனவாதிகளுக்கு ஆதரவானவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டால், அது தோற்கடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பிரதமராக தொடர்ந்தும் ரணில் பதவி வகிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.