இலங்கை குறித்த ஐநா அறிக்கை தொடர்பில் சர்வதேச நிபுணர்களுடன் விசேட கலந்துரையாடல்

Report Print Dias Dias in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் சர்வதேச நிபுணர்களுடன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி. கிருபாகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

37வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்ஸ் மனித உரிமைகள் மையம் நடாத்திய பக்க அறை செயலமர்வு நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மெக்கோனல், பசுமை தாயகம் அமைப்பின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.