தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

Report Print Yathu in அரசியல்
116Shares

தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டியவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்கள் தங்களின் நியமன கடிதங்களை கட்சி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவது கூடாது அல்ல, ஆனால் அரசியல் சார்ந்து ஆதரவு வழங்காது, சபை அமர்வுகளிற்கு ஆதரவு வழங்குமாறு அவர் பணித்தார்.

இதேவேளை தலைவர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் தனக்கு கிடைத்த 2 கோடி ரூபாவை தமது மகனின் தொகுதியில் செலவளித்த சம்பவமும் இங்கு நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.