அதிகாலை நான்கு மணிக்கு இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வு

Report Print Thirumal Thirumal in அரசியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை விநாயகர் ஆலய மண்டபத்தில் விசேட வழிபாடுகளின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 134 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நகரசபை, மாநகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தனித்தும், கூட்டிணைந்தும் வெற்றிபெற்ற மற்றும் பட்டியலினூடாக தெரிவாகிய உறுப்பினர்களே இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.