வவுணதீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இன்று பி.ப 2:30 மணிக்கு நடைபெற்றது.

சபையின் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்லத்தம்பி சண்முகராசா, உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைபின் பொ.செல்லத்துரை தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது.

இதில் செ.சண்முகராசாவுக்கு 10 வாக்குகளும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் த.இராமகிருஸ்ணனுக்கு 04 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

சபையின் வாக்கெடுப்பில்.தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.