சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையா? தினேஸ் என்ன கூறுகின்றார்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை நாடாளுமன்றம் கேலிக் கூடமாக மாறுவதை தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எங்களால் கொண்டு வர முடியாது. அவர் எம்மை பிரதிநிதித்துவப்படுகிறார் என்பதே இதற்கு காரணம்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும். எனினும் நாட்டின் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பவர் போல், அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றி வருவது கேலிக்குரியது.

இதனால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தது.

எதிர்காலத்தில் சர்வதேசம் வரை சென்று தகுதியான எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.