விரைவில் முக்கிய தகவலை வெளியிடவுள்ளார் விக்னேஸ்வரன்

Report Print Shalini in அரசியல்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பிலும் சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து விக்ஸே்வரன் விளக்கமளித்துள்ளார்.

அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முதலமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதில் “சுமந்திரன் கூறிய கருத்துக்கு எதிர்வரும் 12ம் திகதி நான் பதிலை தெரிவிக்கவுள்ளேன்.”

இரண்டு வார பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்வதாகவும், இந்த பயணத்தில் அரசியல் ரீதியான சந்திப்புக்கள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருடைய வேண்டுகோள் பரிசீளிக்கப்படும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.