ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சிறிய கட்சியல்ல: சிறியானி விஜயவிக்கிரம

Report Print Nesan Nesan in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சிறிய கட்சியல்ல இது பெரிய கட்சி அதனால் தான் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அதிகளவான உறுப்பினர்களை பெற்றிருந்தோம் என மாகாண உள்ளூராட்சி பிரதி அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அம்பாறை காரைதீவு விபுலானந்தர் சதுக்கத்தில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி காரியாலய திறப்பு விழா இன்று இடம்பெற்றள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

எமது கட்சியானது மற்றவர்கள் நினைப்பது போன்று உடையும் கட்சியுல்ல, உடையப்பேகும் கட்சியுமல்ல சிறிய தொகையினர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்களே தவிர கட்சியை விட்டு விலகவில்லை.

அவர்கள் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனே இருக்கின்றார்கள். யார் போனாலும் இருக்கின்றவர்கள் இருப்பார்கள். கட்சியானது தனது பாதையில் சரியானமுறையில் செல்லும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

நாங்கள் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் தற்போதும் இருந்துகொண்டிருக்கின்றோம்.

எமக்கு கிடைத்த ஜனாதிபதி ஒரு இனத்திற்கு மாத்திரமோ, அமைப்பிற்கு மாத்திரமோ சொந்தமானவர் அல்ல மாறாக ஜாதி, பேதம் இல்லாது அனைத்து இலங்கை மக்களுக்கும் சேவையாற்றக்கிடைத்த ஒரு ஜனாதிபதி என்பதனை இட்டு மகிழ்வடைகின்றோம்.

அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர் என்றவகையில் நான் உங்களுக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றேன். ஆனால் நீங்கள் அனைவரும் எதிர்வரும் எந்தத்தேர்தலாக இருந்தாலும் அனைத்து தேர்தலிலும் என்னுடன் இணைந்து சேவையாற்ற முன்வரவேண்டும்.

30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தசூழல் காரணமாக இந்தப்பிரதேசத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது அதனை தீர்ப்பதற்கு நான் பாடுபடுவேன் .

ஜனாதிபதியினால் கிடைக்கும் பிரதிபலன்களை வைத்துக்கொண்டுதான் மக்களாகிய உங்களுக்கு ஏதாவது செய்ய முடியும். அதனை எதிர்காலத்தில் விரிவுபடுத்தி செய்யவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிகழ்விற்கு மாகாண உள்ளூராட்சி பிரதி அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம, ஸ்ரீலங்கா மக்கள் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன், காரைதீவின் பிரதேச சபையின் பிரதித்தவிசாளர், உறுப்பினர்கள், பொறியியலாளர் கிருஸ்ணமூர்த்தி, கட்சியின் ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.