மஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை

Report Print Shalini in அரசியல்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் கெரோம் போர்ட்களை (carrom boards) இறக்குமதி செய்யும் போது, 53 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.