மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை

Report Print Shalini in அரசியல்

இரண்டாம் இணைப்பு

மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரை 35,000 ரொக்கப் பிணை மற்றும் 500,000 ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவித்து கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் இணைப்பு

மஹிந்தானந்த அலுத்கமகே கைது

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு இன்று காலை வருகை தந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, கெரோம் போர்ட்களை (carrom boards) கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் அழைக்கப்பட்டிருந்தார்.