லண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியடைந்த மைத்திரி

Report Print Shalini in அரசியல்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பொதுநலவாய மாநாடு லண்டனில் நடைபெறவுள்ளது.

இதற்காக பிரித்தானியா நோக்கி சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்.

இதன்போது லண்டனில் உள்ள இலங்கையர்களால் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாரம்பரிய உடையில் இருந்த லண்டன் வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் வெற்றிலை கொடுத்து வரவேற்றுள்ளனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த ஜனாதிபதி “2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள லண்டன் வந்தடைந்தேன்,

அவர்களின் அன்பான வரவேற்புக்காக பிரித்தானியாவில் இருக்கும் இலங்கையர்களுக்கு நன்றி.” என ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.