மட்டக்களப்பை கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்!

Report Print Kumar in அரசியல்

கட்சி பேதங்களுக்கு அப்பால் இனமத பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாநகரசபையினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் காலை இடம்பெற்றது.

இன்றைய அமர்வின்போது, மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட 38 உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் கொண்டு செல்லும் வகையில், கல்வி, சுகாதாரம், காணி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், அபிவிருத்தி உட்பட எட்டு மாநகர கட்டளை நியதிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தலா ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதீடுகள் சபையில் முன்வைக்கப்பட்டன.

இதன்போது, பல்வேறு கருத்துக்கள் சபை உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன், இதன்போது பாதீட்டில் ஏதேனும் சேர்ப்பதாக இருந்தால் குறை நிரப்பு பிரேரணை மூலம்ட சபையின் ஏகோபித்த தீர்மானங்கள் மூலம் சேர்க்கமுடியும் என்றும் உருவாக்கப்பட்டுள்ள பாதீட்டில் ஏதாவது மாற்றத்தினை சபையின் அனுமதியுடன் எதிர்காலத்தில் செய்யமுடியும் என்றும் சபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதீடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது பாதீட்டில் ஏதாவது சேர்ப்பதாக இருந்தால் குறை நிரப்பு பிரேரணை மூலம் சபையின் ஏகோபித்த தீர்மானங்கள் மூலம் சேர்க்கமுடியும் என்றும் உருவாக்கப்பட்டுள்ள பாதீட்டில் ஏதாவது மாற்றத்தினை சபையின் அனுமதியுடன் எதிர்காலத்தில் செய்யமுடியும் என்றும் சபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.