தமிழ் மொழியில் கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை: மொறவெவ பிரதேச சபை கூட்ட அமர்வில் கோரிக்கை

Report Print Gokulan Gokulan in அரசியல்

மொறவெவ பிரதேச சபை கூட்ட அமர்வுகளை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதுடன் அனைத்து கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் சித்திரவேலு சசிகுமார் தெரிவித்தார்.

திருகோணமலை,மொறவெவ பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (16) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணைாயளர் எம்.வை.சலீம் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் மொறவெவ பிரதேச சபையில் ஜந்து பேர் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தனி சிங்களத்தில் சபை அமர்வுகளை நடாத்தக்கூடாது. அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளை நடாத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மொறவெவ பிரதேச சபை தவிசாளர் தெரிவு மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம் பெற்ற நிலையில் ஜந்து தமிழ் பேசும் உறுப்பினர்கள் இருந்தும் கூட உப தவிசாளர் பதவியைக்கூட வழங்க முன்வராதமையினையிட்டு தான் கவலையை வௌிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.