தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் 18 மாத காலத்திற்கும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

அரசாங்கத்தை எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்வது என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்தக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆரம்ப அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.

எதிர்வரும் பதினெட்டு மாத காலத்தில் எவ்வாறு செயற்படுவது, சுதந்திரக் கட்சியின் வகிபாகம் எவ்வாறு அமையும் என்பது குறித்து இந்தக் குழுவினர் பரிந்துரை செய்ய உள்ளனர்.