தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த உறுதி! பிரதமர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in அரசியல்

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் நுவரெலியாவில் சில பகுதிகளை வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பத்தக்க பிரதேசங்களாக மாற்றியமைக்க போவதாக அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அந்த வகையில் நுவரெலியா மாவட்ட பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைக்கும் நோக்கில் அதற்கான இடங்களை பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொகவந்தலாவைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் பிரதி தலைவர் ஏ.எம்.பாமிஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அதேவேளை பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றிற்கும் பிரதமர் விஜயம் செய்துள்ளார்.