யாழ். மக்களுக்கு தமிழில் நன்றி கூறிய ரெஜிநோல்ட் குரே

Report Print Shalini in அரசியல்

இந்த நேரத்தில் மீண்டும் பிறந்திருப்பது போன்ற மகிழ்ச்சி தமக்கு ஏற்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்ற போதே ரெஜிநோல்ட் குரே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“தாம் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலை முடியும் முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து போக வேண்டிய நிலை வருமோ என்ற கவலை என்னுள் இருந்தது.

ஆனால் என்னை மீண்டும் வடமாகாண ஆளுநராக ஜனாதிபதி நியமித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

இதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன், அத்துடன் யாழ்ப்பாண மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

ஆளுநர்கள் இடமாற்றம் தொடர்பான செய்தியை கேட்டவுடன், ஜனாதிபதிக்கும் முதலமைச்சருக்கும் “என்னை யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்ப வேண்டாம்” என கடிதம் எழுதி அனுப்பியதாலேயே நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றேன்.

இதன்மூலம் தற்போது மீண்டும் நான் பிறந்திருப்பது போன்று உணர்கின்றேன்.

எதிர்காலத்தில் யாழ். மக்களுக்கு சிறந்த சேவை செய்வேன் என்றும், அபிவிருத்திகளை செய்வேன் என்றும் உறுதியளிக்கின்றேன்.” என வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்துள்ளார்.