பிரித்தானிய பிரதமரை நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி

Report Print Shalini in அரசியல்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே க்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில், பல காரணிகள் கலந்துரையாடப்படவுள்ளன.

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி, லண்டனில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் வழங்கும் விசேட வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இடம்பெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் போது நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

அதன் பின்னர் பொதுநலவாய விளையாட்டு மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.