வரிச் சட்டம் மற்றும் பொருட்களின் விலை உயர்விற்கு எதிராக போராட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய வரிச் சட்டம் மற்றும் பொருட்களின் விலை உயர்வு ஆகியனவற்றுக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் இன்றைய தினம் காலியில் நடத்தப்பட உள்ள மே தினக் கூட்டத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

“வரிச் சட்டம், பொருட்களின் விலை உயர்வினை எதிர்ப்போம்” என்ற தொனிப் பொருளில் இன்று காலியில் மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் தொடர்பில் கடும் அதிருப்தி கொண்டுள்ள பலர் இன்று காலி சமனல விளையாட்டு மைதானத்தில் இணைந்து கொள்வார்கள்.

நாட்டின் கலைஞர்கள், இலக்கியவாதிகளுக்கு இந்த அரசாங்கம் எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை. அரசாங்கம் இலக்கியவாதிகளுக்கு கடுமையான வரிகளை விதித்துள்ளது.

இந்த புதிய வரிச் சட்டங்களுக்காக விரைவில் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். அரசாங்கத்தினால் நிர்க்கதியான மக்கள் காலி மே தினக் கூட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.