சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையில் மகேந்திரனுக்கே கூடுதல் நலன் - பந்துல குணவர்தன

Report Print Kamel Kamel in அரசியல்

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினால் அர்ஜூன் மகேந்திரனுக்கே கூடுதல் நலன் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, தற்பொழுது சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு சாதகமான அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் ஊடாக சிங்கப்பூரில் இருந்து கொண்டே இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அர்ஜூன் மகேந்திரனுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும். நாடு முழுவதிலும் போராட்டங்கள் இந்த உடன்டிக்கைக்கு எதிராக நாடு முழுவதிலும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

சிங்கப்பூர் பிரஜைகள் மற்றும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களுக்கு இலங்கையில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யவே இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நாள் தோறும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கின்றது, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.