ஐ.தே.கவிற்கு மேலும் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள்

Report Print Kamel Kamel in அரசியல்
93Shares

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலும் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் 6 அல்லது 8 பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு இவ்வாறு பதவி வழங்குதற்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாளைய தினம் இந்த பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

1994ஆம் ஆண்டு முதல் இதுவரையில் நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் 4 ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், இரண்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புத்திக்க பத்திரண, எட்வட் குணசேகர, லகி ஜயவர்தன, ஆனந்த குமாரசிறி, ரஞ்சித் அலுவிஹாரே உள்ளிட்டவர்களுக்கு இந்த பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.