நாடாளுமன்ற ஆசன முறைமையில் மாற்றம்

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற ஆசன முறைமையில் நாளைய தினம் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தரப்பில் அமர தமக்கு ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய ஆசன மாற்றங்கள் இடம்பெறுவதாகவும், குறித்த 16 பேரில் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் நாளைய தினம் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.