வடக்கு, கிழக்கில் விகாரைகள்? சுமந்திரன் மீது குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

பௌத்த மதம் அன்பையும், கருணையையும் வெளிக்காட்டும் மதம் என்றும் தேசிய சுதந்திரமுன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் தமது கடுமையான ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் விமல் வீரவன்சவின் அணியினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.