ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மக்களே தெரிவு செய்ய வேண்டும் சஜித் பிரேமதாச

Report Print Steephen Steephen in அரசியல்

காலி முகத்திடலில் லட்சக்கணக்கான மக்களை கூட்டி, அவர்களின் யோசனை மற்றும் நிலைப்பாட்டுக்கு அமைய ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்ய வேண்டும் என அந்த கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அப்படி மக்களை ஒன்று திரட்டிய மே தினக் கூட்டத்திலேயே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் கஷ்டங்களுக்கு உள்ளானது போதுமானது. ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியாளர் மட்டுமல்லாது ஐக்கிய தேசியக்கட்சியின் முழுமையான அரசாங்கத்தை ஆட்சிக்குகொண்டு வர வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலை வெல்வது பற்றி யோசிப்பதற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் சவாலை வெல்ல வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.