பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தன்னை கைதுசெய்யுமாறு கோரி புளத்சிங்கள பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் இந்த பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியமை சம்பந்தமாக புளத்சிங்கள பிரதேச சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை பொலிஸார் கைதுசெய்தமை காரணமாக பிரதியமைச்சர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சுமார் நான்கு மணி நேரம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அண்மையில் தான் உட்பட 35 பேர் பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதாகவும் பிரதான சந்தேக நபரான தன்னை கைது செய்யுமாறு கோரி பிரதியமைச்சர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.