ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே காலாவதியான பொருள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு தான் ஓய்வுபெற போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள விமல் வீரவங்ச, ஜனாதிபதி ஓய்வுபெற வேண்டிய தேவையில்லை, நாட்டு மக்கள் அவரை ஏற்கனவே ஓய்வுபெற செய்து விட்டதாகவும் ஜனாதிபதி தற்போது காலாவதியான பொருள் எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.